நெல்லைக்கு ரெயிலில் 2,600 டன் ரேஷன் அரிசி வந்தது


நெல்லைக்கு ரெயிலில் 2,600 டன் ரேஷன் அரிசி வந்தது
x
தினத்தந்தி 6 May 2023 7:00 PM GMT (Updated: 6 May 2023 7:01 PM GMT)

சத்தீஷ்கா் மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் 2,600 டன் ரேஷன் அரிசி வந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக இந்திய உணவு கழகம் சார்பில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் 42 ரெயில் பெட்டிகளில் ஏற்றி நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ரெயில் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

அங்கு தொழிலாளர்கள் அரிசி மூட்டைகளை ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அவை சிவந்திபட்டி முத்தூரில் உள்ள தமிழ்நாடு வாணிபகழக குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து நெல்லை மாவட்ட ரேஷன் கடைகளுக்கு தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படுகிறது.


Next Story