மதுரை மாவட்டத்தில் 26.49 லட்சம் வாக்காளர்கள்- இறுதி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


மதுரை மாவட்டத்தில் 26 லட்சத்து 49 ஆயிரத்து 793 வாக்காளர்கள் உள்ளனர். இதன் இறுதி பட்டியலை கலெக்டர் அனிஷ்சேகர் வெளியிட்டார்.

மதுரை


மதுரை மாவட்டத்தில் 26 லட்சத்து 49 ஆயிரத்து 793 வாக்காளர்கள் உள்ளனர். இதன் இறுதி பட்டியலை கலெக்டர் அனிஷ்சேகர் வெளியிட்டார்.

இறுதி பட்டியல்

மதுரை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.இந்த தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் அனிஷ்சேகர் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 26 லட்சத்து 35 ஆயிரத்து 238 வாக்காளர்கள் இருந்தனர். இந்த பட்டியலின்படி திருத்தம் மற்றும் நீக்கம் செய்யும் பணி நடந்தது. இந்த பணி முழுவதும் முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 26 லட்சத்து 49 ஆயிரத்து 793 வாக்காளர்கள் உள்ளனர்.

கிழக்கு தொகுதி

இதில் ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 2 ஆயிரத்து 834 பேரும், பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 46 ஆயிரத்து 733 பேரும் உள்ளனர். திருநங்கைகள் 226 பேர் உள்ளனர். அதில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு தொகுதியில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 270 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக சோழவந்தான் (தனி) தொகுதியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 72 வாக்காளர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் சுகி பிரேமலா (மதுரை), பிரிதோஷ் பாத்திமா (மேலூர்), நடராஜன் (உசிலம்பட்டி), சவுந்தர்யா (திருமங்கலம்) உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story