27-ந்தேதி மின்நிறுத்தம்
சீர்காழி பகுதியில் 27-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் வருகிற 27-ந்தேதி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி நகர் பகுதிக்குட்பட்ட திருக்கோலக்கா, கோவில்பத்து, ெரயில்வே ரோடு, பணமங்கலம், மூங்கில் வளாகம், கொள்ளிடம் முக்கூட்டு, தாடாளன் கோவில், சிதம்பரம் ரோடு, விளந்திட சமுத்திரம், பனங்காட்டான் தெரு, ஊழியக்காரன் தோப்பு, புளிச்சக்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு 27-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் (பொறுப்பு) விஸ்வநாதன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story