மது விற்ற 27 பேர் கைது


மது விற்ற 27 பேர் கைது
x

மது விற்ற 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார். இதையொட்டி போலீசார் கடந்த 17-ந்தேி முதல் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 185 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story