27 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்
தேனி மாவட்டத்தில் 27 சப்-இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவு பிறப்பித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
தேனி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் 27 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பிறப்பித்துள்ளார்.
அதன்படி, போடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தேனிக்கும், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகண்ணன் பழனிசெட்டிபட்டிக்கும், கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் வீரபாண்டிக்கும், ஆண்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் வீரபாண்டிக்கும், வீரபாண்டி சப்-இன்ஸ்பெக்டர் லதா பெரியகுளத்துக்கும், உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா ஜெயமங்கலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆண்டிப்பட்டிக்கும், தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் க.விலக்குக்கும், நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தவசிராஜன் வைகை அணைக்கும், ஆண்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் யாழிசைசெல்வன் மாவட்ட குற்றப்பதிவேட்டு பிரிவுக்கும், வைகை அணை சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர் ரகுமான் ராஜதானிக்கும், போடி நகர் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் கண்டமனூருக்கும், வீரபாண்டி சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் கடமலைக்குண்டுவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கம்பம், கூடலூர்
நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அழகிரிசாமி மயிலாடும்பாறைக்கும், க.விலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வருசநாட்டுக்கும், பழனிசெட்டிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் அசோக் போடி நகருக்கும், தேனி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் போடி தாலுகாவுக்கும், ராயப்பன்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாயன் சின்னமனூருக்கும், ஓடைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் உத்தமபாளையத்துக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆசீர்வாதம் ஓடைப்பட்டிக்கும், கம்பம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஓடைப்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் ராயப்பன்பட்டிக்கும், வைகை அணை சப்-இன்ஸ்பெக்டர் எல்.கணேசன் கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கும், உத்தமபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் வி.கணேசன் குமுளிக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பானு உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், குமுளி சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ் ராஜா நெடுஞ்சாலை ரோந்து பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பணி இடமாறுதல் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட போலீஸ் நிலையத்தில் பணியில் சேர வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.