சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக போலீஸ் அதிகாரிகள் 27 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு


சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக போலீஸ் அதிகாரிகள் 27 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக போலீஸ் அதிகாரிகள் 27 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் எஸ்.பி. டாக்டர் சுதாகரும் இந்த விருதை பெறுகிறார்.

சென்னை,

நாடு முழுவதும் சிறப்பான பணியாற்றுகிற போலீஸ் துறையினருக்கு, சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக போலீஸ் துறையில் 27 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு நேற்று போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

நாடு முழுவதும் தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு 2 முறை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படுகின்றன. போலீசாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது.

கூடுதல் டி.ஜி.பி. சங்கர்

அந்த வகையில் இந்த ஆண்டு, ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான போலீஸ் விருது தமிழ்நாடு போலீஸ் துறையை சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

அவர்கள் கூடுதல் டி.ஜி.பி. (நிர் வாகம்) கி.சங்கர், ஐ.ஜி. (நுண்ணறிவு பிரிவு - உள்நாட்டு பாதுகாப்பு) சி.ஈஸ்வரமூர்த்தி, சேலம் மாநகர துணை போலீஸ் கமிஷனர் ம.மாடசாமி ஆவார்கள்.

முத்தரசி - நாகஜோதி

இதேபோன்று ஜனாதிபதியின் பாராட்டத்தக்க பணிக்கான போலீஸ் விருதுகள், தமிழ்நாடு போலீஸ் துறையை சேர்ந்த 24 பேருக்கு வழங்கப்படுகிறது. அவர்களின் பெயர் விவரங்கள் வருமாறு:-

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, சென்னை குற்றப்புலனாய்வுத் துறை எஸ்.பி.-2 ஜா.முத்தரசி, சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு (1) துணை கமிஷனர் ஜி.நாகஜோதி, காஞ்சீபுரம் எஸ்.பி. டாக்டர் ம.சுதாகர், சென்னை எஸ்.பி. (வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு) டி.சண்முக பிரியா, சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை எஸ்.பி. (மேற்கு சரகம்) ஏ.மயில்வாகனன்.

சென்னை குற்றப் புலனாய்வுத் துறை (தனிப்பிரிவு) எஸ்.பி.-2 ச.சரவணன், புதுக்கோட்டை மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி. பா.ராஜேந்திரன், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு (இணையதளம்) உதவி கமிஷனர் கோ.வேல்முருகன், சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலக டி.எஸ்.பி. த.சவரிநாதன், சென்னை குற்றப்புலனாய்வுத் துறை டி.எஸ்.பி. (மெட்ரோ-2) த.புருஷோத்தமன்.

இன்ஸ்பெக்டர் வீரகுமார்

சென்னை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு டி.எஸ்.பி. சா.ஜெயதுரை ஜான் கென்னடி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உட்கோட்டம் டி.எஸ்.பி. ரா.தனராசு, சென்னை குற்றப்புலனாய்வுத் துறை (சிறப்பு புலனாய்வு பிரிவு) டி.எஸ்.பி. கே.கவுதமன், சேலம் மாநகர உதவி கமிஷனர் (நுண்ணறிவு பிரிவு) தி.சரவணன், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மா.சுதேசன், சென்னை யானைக்கவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் த.வீரகுமார்.

சென்னை குற்றப் புலனாய்வுத் துறை (பாதுகாப்பு பிரிவு) இன்ஸ்பெக்டர் சா.சுப்புரவேல், திருநெல்வேலி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இன்ஸ்பெக்டர் தி.ராபின் ஞானசிங், மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இன்ஸ்பெக்டர் த.சூரியகலா, ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை-5 இன்ஸ்பெக்டர் எஸ்.பவுல் பாக்கியராஜ், சென்னை குற்றப் புலனாய்வுத் துறை (தனிப்பிரிவு) சப்-இன்ஸ்பெக்டர் நா.வெங்கடசுப்ரமணியன், தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் க.செல்வராஜ், சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை (நகரம் 3) சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தா.அந்தோணி தங்கராஜ்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1,082 பேர்

இவ்வாறு சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் மொத்தம் 1,082 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வீரச்செயல்களுக்கான விருது 347 பேருக்கும், தகைசால் விருது 87 பேருக்கும், பாராட்டத் தக்க பணிக்கான போலீஸ் விருது கள் 648 பேருக்கும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு விருது

இந்த விருது பட்டியலில் நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணையிலும், உள்நாட்டு கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ள 30 சி.பி.ஐ. அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் சென்னை சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு டி.ஸ்ரீதரன் உள்பட 6 பேருக்கு தகைசால் பணிக்கான போலீஸ் விருது வழங்கப்படுகிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் 24 பேருக்கு ஜனாதிபதியின் பாராட்டத்தக்க பணிக்கான போலீஸ் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story