முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 2,750 போலீசார்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 2,750 போலீசார்
x

கரூருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி 2,750 ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கரூர்

நலத்திட்ட உதவிகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) கரூர் திருமாநிலையூரில் உள்ள மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்தும், புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் சிறப்புரை ஆற்றுகிறார். இதனையொட்டி நேற்று மாலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கரூருக்கு வருகை புரிந்தார்.

அவருக்கு குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி ஆகிய 4 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கரூரில் உள்ள பயணியர் மாளிகையில் தொழில் முனைவோர்கள், வர்த்தகர்களை சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

2,750 போலீசார் பாதுகாப்பு

இதனையொட்டி திருச்சி சரக ஐ.ஜி. சந்தோஷ்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஐ.ஜி. 2 டி.ஐ.ஜி., 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரத்து 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு நலத்திட்ட விழா நடைபெறும் இடமான திருமாநிலையூர் மைதானத்திலும், அவர் தங்கியுள்ள பயணியர் மாளிகையிலும், பயணியர் மாளிகையில் இருந்து திருமாநிலையூர் மைதானம் வரையிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் போலீஸ் உயர்அதிகாரிகளும் மேற்பார்வையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story