28-ந்தேதி முற்றுகை போராட்டம்
தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி 28-ந்தேதி முற்றுகை போராட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் எஸ்.கார்த்திக் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாநில பொருளாளர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நீட் தேர்வை திரும்ப பெறும் மசோதா, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்துள்ளார். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. தமிழக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி சென்னை ராஜ்பவனில் கவர்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் மாநில நிர்வாகிகள் மணிகண்டன், லெனின், சரவணத்தமிழன், பிரியங்கா, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அய்யப்பன், மாவட்ட செயலாளர் அறிவழகன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.