ஓடும் ரெயிலில் 28 கிலோ கஞ்சா சிக்கியது


ஓடும் ரெயிலில் 28 கிலோ கஞ்சா சிக்கியது
x

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் 28 கிலோ கஞ்சா சிக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவிலிருந்து பெங்களூரு செல்லும் ஹட்டியா எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி வழியாக ஜோலார்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த ரெயிலில் நெல்லை உட்கோட்ட ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், சத்தியதாஸ், மற்றும் சிறப்பு போலீசார் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க சோதனையிட்டு வந்தனர்.

அப்போது முன் பதிவு செய்யப்பட்ட எஸ்7 பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த 2 டிராவல் பேக்கில் சோதனை செய்யும் போது 28 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றினர்.

அவற்றை கொண்டு வந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. ரெயில் ஜோலார்பேட்டையை அடைந்ததும் சிறப்பு தனிப்படை போலீசார் அதனை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது சம்பந்தமாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story