280 போலீசார் பணியிட மாற்றம்


280 போலீசார் பணியிட மாற்றம்
x

கடலூர் மாவட்டத்தில் 280 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட 7 உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ்காரர்களை அந்தந்த உட்கோட்டங்களுக்குள்ளே பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கடலூர் புதுநகர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் தேவனாம்பட்டினத்திற்கும், ஹென்றிராஜன் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்திற்கும், போலீஸ்காரர் முகிலன் தேவனாம்பட்டினத்திற்கும், வேலு நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்திற்கும், ஸ்டாலின் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்திற்கும் என மாவட்டத்தில் மொத்தம் 90 போலீஸ்காரர்கள், கடலூர் மாவட்டத்திற்குள்ளே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் பண்ருட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவநாதன் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்திற்கும், போலீஸ்காரர்கள் தேவர் விருத்தாசலத்திற்கும், சுகந்தி கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், ரூத் ஜெயக்குமாரி நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்திற்கும் என மொத்தம் 52 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி உட்கோட்டங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 265 போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர கடலூர் மாவட்ட ஆயுதப்படை மற்றும் வாகன பிரிவில் பணிபுரிந்த 15 பேர் தங்களை பணியிட மாற்றம் செய்யக்கோரி விண்ணப்பித்ததன் அடிப்படையில் அவர்கள், தாலுகா போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.Next Story