2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு


2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:53 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 81 ஆயிரத்து 30 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.31 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல்

மாவட்டத்திலுள்ள 427 ரேஷன்கடையிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இப்பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 6 அடி உயரமுள்ள ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000 அடங்கும். இதற்காக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையில் வெளிப்படைத் தன்மையுடன் வழங்கப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 90 விவசாயிகளிடம் கரும்பு நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரிசி குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி., மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ், உதவி கலெக்டர் யுரேகா, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றிய குழுத்தலைவர் காமாட்சி மூர்த்தி, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story