29 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்


29 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
x

விருதுநகர் அருகே 29 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசிய தகவலின் பேரில் காரியாபட்டி அருகே உள்ள பள்ளத்துப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் தெரு சந்திப்பில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வேனில் 25 கிலோ கொண்ட 29 மூடை ரேஷன் அரிசி இருந்தது. வேனுடன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் வேனிலிருந்த மதுரை நெடுங்குளத்தை சேர்ந்த அழகுமாரிமுத்து (வயது 22), கருப்பாயூரணி உசேன் நகரை சேர்ந்த ரேவந்த் (26), காரியாபட்டி ஜெகஜீவன் ராம் நகரை சேர்ந்த முனியசாமி (40), மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த கருப்பசாமி (52) ஆகிய 4 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் ரேஷன் அரிசியை அப்பகுதியில் சேகரித்து மதுரைக்கு கொண்டு சென்று மாவாக அரைத்து விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.


Next Story