29 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


29 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x

விராலிமலையில் 29 கிேலா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

புகையிலை பொருட்கள் விற்பனை

விராலிமலை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணமேல்குடி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சுல்தான் (வயது 54) என்பவர் காமராஜர் நகர் பகுதியில் உள்ள அவரது மளிகைக் கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

29 கிலோ பறிமுதல்

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இவருக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த மணப்பாறை இளங்காகுறிச்சியை சேர்ந்த சேக் அப்துல்லா (27) என்பவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரிடமிருந்தும் 29 கிலோ 700 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story