மது விற்ற 29 பேர் கைது


மது விற்ற 29 பேர் கைது
x

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி கடந்த 10-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை போலீசார் மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 29 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 248 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story