ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 29 பவுன் நகை திருட்டு
அரக்கோணம் அருகே ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 29 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர் இச்சிபுத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 62). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கோகிலா உடல் நிலை பாதிப்பில் இருந்ததால். சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மகன் வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்றுள்ளார். இந்த நிலையில் இவர்களின் வீட்டின் பின்புற ககவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.
தகவல் அறிந்து பெங்களூரில் இருந்து திரும்பி வந்த பக்தவச்சலம் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பிரோவில் இருந்த 29 பவுன் நகை வீட்டில் இருந்த எல்.ஈ.டி. டி.வி., இன்வெர்ட்டர் பேட்டரி, பித்தளை பூஜை பொருட்கள் உள்ளிட்டவை திருட்டு போனதும் தெரிய வந்தது.
இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.