மக்கள் நீதிமன்றத்தில் 299 வழக்குகளுக்குத் தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 299 வழக்குகளுக்குத் தீர்வு
x

மக்கள் நீதிமன்றத்தில் 299 வழக்குகளுக்குத் தீர்வு

திருப்பூர்

போடிப்பட்டி

உடுமலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 299 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

4 அமர்வுகள்

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்கும் விதமாகவும், சமரசம் மூலம் தீர்வு காணக் கூடிய வழக்குகளை முடித்து வைக்கும் வகையிலும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் உடுமலை நீதிமன்றங்களில் நேற்று மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) 4 அமர்வுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் அமர்வில் மாவட்ட கூடுதல் நீதிபதி முரளிதரன், வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன், வழக்கறிஞர் பஷீர் அகமது, அரசு வழக்கறிஞர் சேதுராமன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.2-வது அமர்வில் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், வழக்கறிஞர் மகாலட்சுமி, அரசு தரப்பு வழக்கறிஞர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.3-வது அமர்வில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி விஜயகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர்கள், காப்பீட்டு அலுவலர்கள், வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

340 வழக்குகள் விசாரணை

இந்த அமர்வுகளில் மொத்தம் 340 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அதில் 299 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.இதில் சொத்து சம்பந்தமான வழக்குகள் 18-ல் 10 க்கு தீர்வு காணப்பட்டது.மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 60-ல் 57 முடித்து வைக்கப்பட்டது.வங்கி வாராக்கடன் வழக்குகள் 25-ல் 2 க்கு தீர்வு கிடைத்தது.மேலும் சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள் 222 எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்தும் முடித்து வைக்கப்பட்டது.

ஜீவனாம்சம் மற்றும் விவாகரத்து வழக்குகள் 4-ல் 1 க்கு தீர்வு கிடைத்தது.செக் மோசடி வழக்குகள் 6-ல் 2 முடித்து வைக்கப்பட்டது.பிராமிஸரி நோட்டு வழக்குகள் 5 விசாரணைக்கு எடுக்கப்பட்டு 5-ம் முடித்து வைக்கப்பட்டது.ஆக மொத்தம் ரூ. 5 கோடியே 28 லட்சத்து 87 ஆயிரத்து 641 மதிப்பிலான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

பாக்ஸ் செய்தி

ரூ. 1 கோடி வழக்குக்கு தீர்வு

நீதிமன்றத்தில் நடந்து வந்த விபத்து வழக்கில் தனியார் காப்பீட்டு நிறுவனம் மற்றும் மனுதாரர் என 2 தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.இந்த வழக்கில் மனுதாரருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனம் ஒத்துக் கொண்டதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

---

3 காலம்

உடுமலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்ட வழக்கில் மனுதாரருக்கு இழப்பீடு வழங்கப்பட்ட போது எடுத்த படம்.


Next Story