நேஷனல் ஷாப்பிங் மாலின் 2-ம் ஆண்டு தொடக்க விழா


நேஷனல் ஷாப்பிங் மாலின் 2-ம் ஆண்டு தொடக்க விழா
x

நேஷனல் ஷாப்பிங் மாலின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அஞ்சப்பர் டவரில் நேஷனல் ஷாப்பிங் மாலின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் நேஷனல் ஷாப்பிங் மால் உரிமையாளர் முகமது நசுருதீன் அனைவரையும் வரவேற்றார். வர்த்தக சங்கத் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். தொடக்க விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ், 32 இன்ச் எல்.இ. டி.டி.வி., டேபிள் டாப் கிரைண்டர், மிக்சி, நூறு வாடிக்கையாளர்களுக்கு தோசை தவா உள்பட பல பரிசுகளை வர்த்தக சங்கத் தலைவர் பழனியப்பன் வழங்கினார். இதில் வின்னர்ஸ் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். முதல் பரிசு வாஷிங் மெஷினை ராங்கியம் புகழேந்தி என்பவருக்கும், 2-வது பரிசு ப்ரிட்ஜ் வலையப்பட்டி மகாலட்சுமி என்பவருக்கும், 3-வது பரிசு 32 இன்ச் எல்.இ.டி. டி.வியை பொன்னமராவதி கண்ணன் என்பவருக்கும், 4-வது பரிசு டேபிள் டாப் கிரைண்டரை பொன்னமராவதி தஸ்வின் என்பவருக்கும், 5-வது பரிசு மிக்சி ெநற்குப்பை கதிர்வேல் என்பவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒருவருக்கு ஒன்று வீதம், 100 தோசை தவா பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசளிப்பு விழாவில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழா நேஷனல் ஷாப்பிங் மால் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மன மகிழ்வை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story