சத்தியமங்கலத்தில் 2-வது நாளாக பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா


சத்தியமங்கலத்தில் 2-வது நாளாக  பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா
x

பண்ணாரி மாரியம்மன்

ஈரோடு

சத்தியமங்கலத்தில் 2-வது நாளாக பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா நடைபெற்றது.

சப்பரம் வீதி உலா

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 20-ந் ேததி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து 21-ந் தேதி இரவு பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மனின் சப்பர வீதி உலா புறப்பாடு தொடங்கியது. இந்த சப்பரம் வீதி உலா அருகில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்றுவிட்டு கடந்த 25-ந் தேதி நள்ளிரவு சத்தியமங்கலத்தை வந்தடைந்தது. பின்னர் பண்ணாரி அம்மனின் அக்கா என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவிலை பண்ணாரி மாரியம்மனின் சப்பரம் வீதி உலாவாக சென்று அடைந்தது.

2-வது நாளாக...

நேற்று முன்தினம் காலை தண்டு மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு வடக்குப்பேட்டை, கிட்டேகவுடர் வீதி, சந்தன டிப்போ வீதி, குலாலர் வீதி, சத்யா தியேட்டர் வழியாக, கடைவீதி மற்றும் அக்ரஹாரம் வழியாக வந்து இரவில் கடை வீதியில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் சப்பரம் தங்க வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை பண்ணாரி மாரியம்மனின் சப்பரம் வேணுகோபால சாமி கோவிலில் இருந்து புறப்பட்டு 2-வது நாளாக சத்தியமங்கலத்தில் ரங்கசமுத்திரம் பகுதி முழுவதும் உலா சென்றது. இதையடுத்து எஸ்.ஆர்.டி. சந்திப்பு, கோணமூலை, காந்திநகர், திம்மையன்புதூர், புதிய விரிவாக்க வீதி வழியாக மேற்குபுற முத்துமாரியம்மன் கோவில் சென்றுவிட்டு இரவில் கோட்டூர்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலை பண்ணாரி மாரியம்மன் சப்பரம் சென்றடைந்தது.


Next Story