அறிவியல் மையத்தில் 2-வது நாளாக மக்கள் கூட்டம்
பொங்கல் விடுமுறையையொட்டி நெல்லையில் அறிவியல் மையத்தில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் காணப்பட்டது.
பொங்கல் திருநாளையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. காணும் பொங்கல் விடுமுறையையொட்டி பொது மக்கள் தங்களது உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து பேசினார்கள்.
நெல்லை அறிவியல் மையத்தில் நேற்று முன்தினம் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று 2-வது நாளாக மக்கள் கூட்டம் அலைமோதியது. குழந்தைகள் அங்குள்ள ஊஞ்சல், சறுக்குகளில் ஏறி விளையாடினார்கள். மேலும் அறிவியல் பொருட்களையும் பார்வையிட்டனர். இதனால் அறிவியல் மைய வளாகம் முழுவதும் நேற்று மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இதே போல் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்திலும், அங்குள்ள சிறுவர் பூங்காவிலும் நேற்று மாலை பொது மக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். குழந்தைகள் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் ஏறி விளையாடினார்கள்.
நெல்லை மாநகரில் ஆங்காங்கே உள்ள மாநகராட்சி பூங்காக்களிலும் நேற்று மாலை பொது மக்கள் வருகை அதிகமாக இருந்தது. இதையொட்டி மாநகரில் முக்கிய சந்திப்பு, பூங்கா பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக போடப்பட்டிருந்தது.