ஈரோட்டில் 2-வது நாளாக போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 277 பேர் மீது வழக்கு பதிவு


ஈரோட்டில் 2-வது நாளாக  போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 277 பேர் மீது வழக்கு பதிவு
x

ஈரோட்டில் 2-வது நாளாக போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 277 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு

தமிழகம் முழுவதும் கடந்த 26-ந்தேதி முதல் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி வாகன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது புதிய விதிமுறைப்படி ரூ.1,000 விதிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் வாகன விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி கடந்த 26-ந் தேதி தொடங்கியது.

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் 2-வது நாளாக போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் மட்டும் வாகன விதிமுறைகளை மீறியதாக 277 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்திற்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 5 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story