முத்தையாபுரம் பகுதியில் 2-வது நாளாகஅமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறை கேட்பு


முத்தையாபுரம் பகுதியில் 2-வது நாளாகஅமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறை கேட்பு
x
தினத்தந்தி 22 Sept 2023 12:15 AM IST (Updated: 22 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முத்தையாபுரம் பகுதியில் 2-வது நாளாக அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறை கேட்டார்

தூத்துக்குடி

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பகுதிவாரியாக சென்று அமைச்சர் கீதாஜீவன், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி, முத்தையாபுரம் பகுதியிலுள்ள தூத்துக்குடி மாநகராட்சி 52-வது வார்டு மற்றும் 59-வது வார்டுகளுக்கு உட்பட்ட எம்.தங்கம்மாள்புரம் மற்றும் சுந்தர்நகர் பகுதி பொதுமக்களிடம் நேற்று 2-வது நாளாக குறைகளை கேட்டறிந்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.

இந்த குறைகேட்பு நிகழ்ச்சியின் போது, மாநகராட்சி ஆணையாளர் திணேஷ்குமார் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story