ஈரோட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனைடாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2 கோடியே 10 லட்சம் சிக்கியது


ஈரோட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனைடாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2 கோடியே 10 லட்சம் சிக்கியது
x

ஈரோட்டில், டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் நேற்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.2 கோடியே 10 லட்சம் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு

ஈரோட்டில், டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் வீட்டில் நேற்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.2 கோடியே 10 லட்சம் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனை

ஈரோடு திண்டல் சக்தி நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 65). இவர் கடந்த, 1½ ஆண்டுக்கும் மேலாக மதுபான தொழிற்சாலைகளில் இருந்து மதுபானங்களை பெற்று, டாஸ்மாக் குடோன்களுக்கும், அங்கிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்லவும் லாரி ஒப்பந்தத்தை பெற்றுள்ளார்.

மாநில அளவில் இவர் ஒருவர் மட்டுமே லாரி ஒப்பந்ததாரராக இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகள், சரக்கு வேன்களில் மதுபானங்களை சப்ளை செய்து வருவதாக தெரிகிறது. சமீபத்தில் 150-க்கும் மேற்பட்ட சரக்கு வேன்களை சச்சிதானந்தம் சொந்தமாக வாங்கியதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

பணம் சிக்கியது

இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி ஈரோட்டில், சச்சிதானந்தம் வீட்டிலும், செங்கோடம்பாளையம் காதுகேளாதோர் பள்ளிக்கூடம் அருகே உள்ள சச்சிதானந்தத்துக்கு சொந்தமான கே.எஸ்.எம். டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து வந்த 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றும் 2-வது நாளாக சச்சிதானந்தம் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடியே 10 லட்சம் சிக்கியதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருமான வரித்துறையினரின் சோதனையையொட்டி அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story