2-வது தவணை பயிர் காப்பீட்டுத்தொகை ரூ. 8.11 கோடி விடுவிப்பு


2-வது தவணை பயிர் காப்பீட்டுத்தொகை ரூ. 8.11 கோடி விடுவிப்பு
x

மாவட்டத்தில் 2-வது தவணை பயிர் காப்பீட்டுத்தொகை ரூ. 8.11 கோடி விடுவிக்கப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முதல் தவணையாக மக்காச்சோளம், கம்பு, சோளம், நெல், பாசிப்பயிறு, உளுந்து, துவரை, நிலக்கடலை, சூரியகாந்தி, பருத்தி ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகையாக ரூ. 15.53 கோடி பயிர் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் 15,784 விவசாயிகளுக்கு கடந்த ஜனவரி 30-ந் தேதி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது 2021- 2022-ம் ஆண்டிற்கு 2-வது தவணையாக ரூ. 8.11 கோடி, 7,827 விவசாயிகளின் மக்காச்சோளம், கம்பு, சோளம், நெல், பாசிப்பயிறு, உளுந்து, துவரை, நிலக்கடலை, சூரியகாந்தி, பருத்திப்பயிர்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையாக பயிர் காப்பீட்டு நிறுவனம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன் தெரிவித்துள்ளார்.


Next Story