இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு


இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு
x

இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

வேலூர்

வேலூர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வும் (தமிழுக்கு கட்ஆப் மார்க் 89.9-85, ஆங்கிலத்துக்கு 79.9-65), கலை, பொருளியல், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை ஆகிய கலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு 17-ந் தேதியும் (319.9- 295), கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாவய்வு 18-ந் தேதியும் (319.9-295) நடக்கிறது. அந்தந்த நாட்களில் காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.

கலந்தாய்வு அன்று கல்லூரிக்கு நேரில் வரும்போது உரிய சான்றிதழ்களை கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். அவற்றை சரிபார்த்து பின்னர் தங்களின் சேர்க்கை குறித்து உறுதிசெய்யப்படும். சேர்க்கைக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இந்த கலந்தாய்வின் சேர்க்கை குழு உறுப்பினர்களாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சீனுவாசகுமரன், துறை தலைவர்கள் மாரிமுத்து, பாபிராஜகாந்தி ஆகியோர் செயல்படுகின்றனர்.

இந்த தகவலை கல்லூரியின் முதல்வர் மலர் தெரிவித்துள்ளார்.


Next Story