வெலிங்டன் கன்டோன்மெண்ட் பகுதியில் 2-ம் கட்டமாக குடிநீர் வினியோக திட்டம்
வெலிங்டன் கன்டோன்மெண்ட் பகுதியில் 2-ம் கட்டமாக குடிநீர் வினியோக திட்டம்
குன்னூர்
குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ மையத்திற்குட்பட்ட பொதுமக்கள் வசிக்கும் சிவில் குடியிருப்பு பகுதிகளை கன்டோன்மெண்ட் போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த நிர்வாகத்தின் கீழ் 7 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் குடிநீர் வினியோகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் கன்டோன்மெண்ட் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் மட்டுமின்றி பொதுமக்கள் அன்றாடம் துணி துவைக்க, சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை கழுவ ரா வாட்டர் என்று அழைக்கப்படும் தண்ணீரை மற்றொரு குழாய் மூலம் வழங்க நிர்வாகம் திட்டமிட்டது. இயற்கை ஊற்று நீரை சேகரித்து அதனை பெரிய தொட்டியில் சேமிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் நேரிடையாக விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி 2-ம் கட்ட குடிநீர் வினியோக திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தை வெலிங்டன் எம்.ஆர்.சி ராணுவ முகாம் பிரிகேடியர் எஸ்.கே.யாதவ் கலந்து கொண்டு குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கன்ட்டோன்மென்ட் போர்டு தலைமை நிர்வாக அதிகாரி முகமது அலி, என்ஜினீயர் சுரேஷ், அலுவலர் ஆனந்த், நியமன உறுப்பினர் ஷீபா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டைர்.