வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து 2-ம் கட்ட கள ஆய்வு
வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து 2-ம் கட்ட கள ஆய்வு நடந்தது.
கரூர்
கரூர் மாவட்டம், புன்செய் புகழூர் மற்றும் நஞ்சை புகழூர் கிராமங்களில் 50 ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்களுக்கு நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் வீட்டு மனை பட்டா 1,705 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா இல்லாமல் வசித்து வரும் பொதுமக்களுக்கு நத்தம் நில வரி திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக 2-ம் கட்டமாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில், புகழூர் வட்டாட்சியர் முருகன், புகழூர் நகராட்சி ஆணையர் கனிராஜ், கமண்டல துணைத்தாசில்தார் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், நில அளவையர்கள் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story