2-ம் கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம்


2-ம் கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடக்கம்
x
தினத்தந்தி 31 May 2023 4:15 AM IST (Updated: 31 May 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் 2-ம் கட்டமாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது.

நீலகிரி

கூடலூர்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியில் காட்டு யானைகள், கரடிகள், புலிகள், சிறுத்தைகள், செந்நாய்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இங்கு பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி 2-வது கட்டமாக நேற்று தொடங்கியது. சீகூர், சிங்காரா, நீலகிரி கிழக்கு சரக வனப்பகுதிகளில் 34 குழுக்களை சேர்ந்த 120 வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். வனச்சரகர் பாலாஜி உள்ளிட்ட வனத்துறையினர் வனவிலங்குகளை நேரில் காணுதல், கால் தடங்கள், எச்சங்கள் அடையாளம் கண்டு ஒவ்வொரு விலங்குகள் குறித்த தகவல்களை சேகரித்தனர். வருகிற 4-ந் தேதி வரை கணக்கெடுக்கப்படுகிறது.


Next Story