துப்பாக்கி சுடும் போட்டியில் 2-ம் பரிசு


துப்பாக்கி சுடும் போட்டியில் 2-ம் பரிசு
x

துப்பாக்கி சுடும் போட்டியில் திருப்பத்தூர் ஊர்க்காவல் துணை படை தளபதிக்கு 2-ம் பரிசு கிடைத்தது.

திருப்பத்தூர்

ஊர்க்காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் துணை படை தளபதிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த திருப்பத்தூர் மாவட்ட துணை படை தளபதி த.சத்தியபாலாஜிக்கு ஊர்க்காவல் படை டி.ஜி.பி. பி.கே.ரவி கேடயம் வழங்கி பாராட்டினார்.

அப்போது வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஊர்க்காவல்படை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story