தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில்2-ம் எண் புயல்எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில்2-ம் எண் புயல்எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல், நாளை (வெள்ளிக்கிழமை) இரவு புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதேபோன்று கடல் கொந்தளிப்பாகவும், பலத்த சூறாவளி காற்ற வீசும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இருப்பதை, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. அனைத்து கப்பல்களும் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நாட்டுப்படகுகளும் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. அனைத்து படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.


Next Story