வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண்-பெண் உருவ செப்பு நாணயம், சங்கு வளையல் உள்பட 3 பழங்கால பொருட்கள்
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண்-பெண் உருவ செப்பு நாணயம், சங்கு வளையல் உள்பட 3 பழங்கால பொருட்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.
விருதுநகர்
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண்-பெண் உருவ செப்பு நாணயம், சங்கு வளையல் உள்பட 3 பழங்கால பொருட்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.
அகழாய்வு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் அகழாய்வு நடந்து வருகிறது. இதில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகின்றன. இங்கு கிடைக்கும் பொருட்கள் அடிப்படையில் இப்பகுதியில் பழங்காலத்தில் தமிழர் நாகரிகம் சிறந்தோங்கி இருப்பது தெரியவந்துள்ளது.இந்தநிலையில் நேற்றைய அழகாய்வு பணியின்போது சுடுமண்ணால் ஆன முத்திரை, சங்கு வளையல், ஆண், பெண் உருவம் பொறித்த செப்பு நாணயம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
இந்த தகவலை வெம்பக்கோட்டை அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கரன் தெரிவித்தார். இந்த பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் இன்னும் அதிக வகை பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story