பெண்ணிடம் தகராறு; 3 பேர் கைது
திருப்பூர்
ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மனைவி சித்திரை செல்வி (வயது 38). இவர் அப்பகுதியில் செயல்படும் பனியன் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர்களான சென்னிமலைபாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (21), ரஞ்சித் (26), சந்தோஷ் (22) ஆகியோர் வீட்டுக்குச் சென்று சித்திரை செல்வியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சித்திரை செல்வி ஊத்துக்குளி போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தினேஷ், ரஞ்சித், சந்தோஷ் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story