கஞ்சா சாக்லேட் வைத்திருந்த 3 பேர் கைது
பல்லடம் அருகே நடந்த வாகன சோதனையில் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த 3 பேர் ைகது செய்யப்பட்டனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாகன சோதனை
பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் மற்றும் ஒரு சிறுவன் போலீசாரை கண்டதும், தப்பிச்செல்ல முயன்றனர்.
இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்ேபாது அவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த சுரேந்தர் மாதவ் மகன் அசோக்ராஜ் (வயது 24), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகாகின் முனிகா மகன் கமலேஷ் (21), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் 3 பேரும் திருமுருகன் மில் அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கிக்கொண்டு, பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களுக்கு கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்தது தெரிய வந்தது.
கஞ்சாசாக்லேட் பறிமுதல்
இதை எடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 550 கிராம் கஞ்சா, 600 கிராம் கஞ்சா சாக்லேட் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.