திருச்செங்கோடு அருகே விபசாரத்தில் சேலம் பெண் உள்பட 3 பேர் கைது


திருச்செங்கோடு அருகே  விபசாரத்தில் சேலம் பெண் உள்பட 3 பேர் கைது
x

திருச்செங்கோடு அருகே விபசாரத்தில் சேலம் பெண் உள்பட 3 பேர் கைது

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே உள்ள வாலரை கேட் பகுதியில் விபசாரம் நடப்பதாக திருச்செங்கோடு நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று மாறுவேடத்தில் வாலரை கேட் பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் 3-வது மாடிக்கு சென்ற போலீசார் அங்கிருந்த அறைக்குள் புகுந்தனர். அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்த சேலத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண் உள்பட 3 இளம்பெண்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் சேலத்தை சேர்ந்த பெண் இணையதளத்தில் ஒரு செயலி மூலம் விபசாரத்தை தொடங்கியதும், அந்த செயலியில் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் பேரம் பேசி விபசாரத்தை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் சேலம் பெண்ணை சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். 2 இளம்பெண்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட செயலி மூலம் வேறு எங்காவது விபசாரம் நடைபெறுகிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story