மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது


மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
x

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நாகக்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் நாகக்கோடு பகுதியைச் சேர்ந்த மரியஎகில் மகன் ஆகாஷ் செல்வன் (வயது 20), ஜெஸ்டின் மகன் பிரபின் (23), வெண்டலிகோட்டைச் சேர்ந்த நாகராஜன் மகன் ஆகாஷ் வயது (28) என்பதும் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 1 கிேலா 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story