மதுபாட்டில், குட்கா பொருட்கள் கடத்திய 3 பேர் கைது


மதுபாட்டில், குட்கா பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
x

கர்நாடகாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வெளி மாநில மதுபாட்டில்கள், குட்கா பொருட்களை கடத்தி வந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

கர்நாடகாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வெளி மாநில மதுபாட்டில்கள், குட்கா பொருட்களை கடத்தி வந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

200 மதுபான பாட்டில்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலமாக வெளிமாநில மதுபானங்கள், குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் திருவண்ணாமலை-செங்கம் சாலை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த அரசு பஸ்சை சோதனை செய்தனர். இதில் கர்நாடகா மாநில மதுபான பாட்டில்களை கள்ளக்குறிச்சியை சேர்ந்த மல்லிகா (வயது 36) என்பவர் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 200 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

31 கிலோ குட்கா பொருட்கள்

தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேளாங்கண்ணி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் சோதனை நடத்தினர். அப்போது பஸ்சில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டது. தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தனியார் பஸ்சின் டிரைவர்கள் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (54), நாமக்கல்லை சேர்ந்த மனோகரன் (52) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 31 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட தனியார் பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story