நிதி நிறுவன மேலாளரை வாளால் வெட்டிய 3 பேர் கைது


நிதி நிறுவன மேலாளரை வாளால் வெட்டிய 3 பேர் கைது
x

ராமநாதபுரத்தில் தீப்பெட்டி கேட்டு இல்லை என்று கூறியதால் நிதி நிறுவன மேலாளரை வாள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் தீப்பெட்டி கேட்டு இல்லை என்று கூறியதால் நிதி நிறுவன மேலாளரை வாள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நிதி நிறுவன மேலாளர்

ராமநாதபுரம் மகாத்மா காந்திநகர் 7-வது தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பாலமுரளி (வயது 30). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் கருவேப்பிலைக்காரத்தெருவை சேர்ந்த மதிவாணன் மகன் நாகேஸ்வரன் என்பவருடன் மாடக்கொட்டான் பஞ்சர் கடை அருகே பேசிக்கொண்டிருந்தாராம்.

அப்போது அந்த பகுதிக்கு வந்த 3 பேர் பாலமுரளியிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர். அவர் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து அசிங்கமாக பேசினார்களாம். இதனை பாலமுரளி கண்டித்தபோது ஆத்திரமடைந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த வாள் மற்றும் பீர்பாட்டிலால் பாலமுரளியின் உடலில் சரமாரியாக வெட்டி தாக்கினர். இதனை கண்டு தடுக்க வந்த நாகேஸ்வரனையும் தாக்கினார்களாம். இதில் படுகாயமடைந்த பாலமுரளி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

3 பேர் கைது

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து ராமநாதபுரம் கோகுல்நகர் ராமபாண்டியன் மகன் அரவிந்த் (29), சேதுபதி நகர் வடக்கு ரவிபாஸ்கரன் மகன் கிரிநிவாஸ் (27), மாடக்கொட்டான் பாக்கியம் மகன் கணேசன் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 அடி நீளமுள்ள வாள் ஆயுதத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story