ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது
நாட்டறம்பள்ளி அருகே ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர் அப்போது பச்சூர் அருகே உள்ள ஆற்றில் மணல் எடுத்து கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது நாட்டறம்பள்ளி அருகே கே.பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த இளையசாரதி (வயது 42) நாயனசெருவு பகுதியை சேர்ந்த சிவகுமார் (36) பள்ளகள்ளியூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (32) ஆகிய 3 பேரும் பச்சூர் பகுதியில் உள்ள ஆற்றில் மணல் எடுத்து கொண்டு இருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மணல் அள்ளி கொண்டு இருந்த உபகரணங்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story