தையல்காரர் கொலை வழக்கில் 3 பேர் கைது
வாணியம்பாடியில் தையல்காரர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி-திருமாஞ்சோலை பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மனுக்கு கரகம் எடுக்கும் விழா நடைபெற்றது.
அப்போது ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த தையல்காரர் சந்திரசேகர் (வயது 37) என்பவருக்கும், ராஜி என்கிற ராஜகோபால் (38) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜகோபால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் சந்திசேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயலட்சுமி, பழனி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜகோபால், ரமேஷ் (34), திருமாஞ்சோலை-புதுமனை பகுதியை சேர்ந்த தேவாசீர்வாதம் மகன் ஈசாக் (19) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.