போதை பொருட்கள் விற்ற 3 பெட்டி கடைக்கு 'சீல்'


போதை பொருட்கள் விற்ற 3 பெட்டி கடைக்கு சீல்
x

போதை பொருட்கள் விற்ற 3 பெட்டி கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

வேலூர்

வேலூரை அடுத்த செதுவாலை, கம்மார்பாளையம், குடிசை கிராமப்பகுதிகளில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் விரிஞ்சிபுரம் போலீசார் நேற்று முன்தினம் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது செதுவாலையை சேர்ந்த காசிம், கம்மார்பாளையத்தை சேர்ந்த அய்யாவு, குடிசை கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் ஆகியோரின் பெட்டி கடையில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ஒரு கிலோ 400 கிராம் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போதை பொருட்கள் விற்பனை செய்த 3 பெட்டி கடைக்கும் அணைக்கட்டு வருவாய்த்துறையினர் நேற்று சீல் வைத்தனர்.


Next Story