3 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்
செய்யாறு பணிமனையில் இருந்து 3 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கத்தை ஒ.ஜோதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை
செய்யாறு
செய்யாறு பணிமனையில் இருந்து தடம் எண்.201, டவுன் பஸ் எண். 56ஏ, செய்யாறு - பிரம்மதேசம் - புலிவலம் - சுனைப்பட்டு உள்ளிட்ட 3 புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க தொடக்க விழா நடந்தது.
நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் கே.விஸ்வநாதன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தடம் எண் 201 பஸ்சை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சிறிது தூரம் ஓட்டினார். அப்போது பஸ்சில் பயணம் செய்த கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் மாமுண்டூர் டி.ராஜ், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், சங்கர், ஞானவேல், தி.மு.க. நிர்வாகிகள் ராஜ்குமார், சவுந்தரராஜன் எஸ்.மோகனரங்கன், கே.துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story