தூத்துக்குடியில்3 கார்கள் எரிந்து சேதம்
தூத்துக்குடியில்3 கார்கள் எரிந்து சேதம் அடைந்தன.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி விலக்கு ஓம்சாந்திநகர் பகுதியில் கார்கள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் உள்ளது. இந்த ஒர்க்ஷாப் முன்பு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நேற்று இந்த கார்களில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 3 கார்கள் எரிந்து சேதம் அடைந்தன.
இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கார்களுக்கு அடிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த பெயிண்ட் தீப்பிடித்ததால் கார்களிலும் தீப்பிடித்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story