3 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


3 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே டேன்டீ, வனத்துறைக்கு சொந்தமான 3 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் அருகே டேன்டீ, வனத்துறைக்கு சொந்தமான 3 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கரன்சி பகுதியில் வனத்துறை மற்றும் டேன்டீ நிறுவனத்துக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சிலர் எல்லை கல்லை உடைத்து, ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது கட்டபெட்டு வனச்சரகத்தில் வன ஊழியராக வேலை பார்க்கும் மாலி என்ற தனமணி என்பவர் வனத்துறை மற்றும் டேன்டீ நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, உறவினர்களுக்கு 'செட்' அமைத்து கொடுத்தது தெரியவந்தது.

நிலங்கள் மீட்பு

இதையடுத்து குன்னூர் வனச்சரகர் சசிகுமார் மற்றும் டேன்டீ துணை மேலாளர் பினோ கிருஷ்ணன மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் டேன்டீ நிறுவன நிர்வாக இயக்குனர் வெங்கடேசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர், உடனடியாக வனத்துறை மற்றும் டேன்டீ நிலங்களை அளவீடு செய்து மீட்டு வேலி அமைக்க உத்தரவிட்டார்.அதன்பின்னர் வனத்துைற மற்றும் டேன்டீ அதிகாரிகள் இணைந்து 3 சென்ட் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு கம்பி வேலி அமைத்தனர். மேலும் கம்பிவேலியை பிரித்தாலோ, மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனச்சரகர் சசிகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story