அனுமதி இன்றி உண்ணாவிரதம் இருந்த காங்கிரசார் 3 பேர் கைது
புதுக்கோட்டையில் அனுமதி இன்றி உண்ணாவிரதம் இருந்த காங்கிரசார் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
சாயர்புரம்:
புதுக்கோட்டை மெயின் பஜாரில் தூத்துக்குடி வட்டார காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில் அனுமதி மீறி உண்ணாவிரதம் இருந்த மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் முள்ளக்காடு சாமுவேல் ஞானதுரை, மாவட்ட எஸ்சி. எஸ்டி. பிரிவு தலைவர் கோபால், வேம்பார் செல்வராஜ்பாண்டியன் ஆகிய 3 பேரையும் புதுக்கோட்டை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Related Tags :
Next Story