ரூ.3¼ கோடியில் பாலங்கள் கட்டும் பணி


ரூ.3¼ கோடியில் பாலங்கள் கட்டும் பணி
x

வாணியம்பாடி தொகுதியில் ரூ.3¼ கோடியில் பாலங்கள் கட்டும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வுசெய்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார். நேற்று மரிமாணிகுப்பம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ரூ.70 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்ட அவர் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மிட்டூர் ஊராட்சி பகுதியில் ஆலங்காயம் - திருப்பத்தூர் சாலையில் ஜல்தி அருகே ரூ.1.25 கோடியில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஆலங்காயத்தை அடுத்த தீர்த்தம் பகுதியில் ரூ.1.25 கோடி செலவில் கட்டப்படும் பாலம் பணிகளையும் சென்று ஆய்வு செய்தார், பணிகளின் தரம் குறித்தும் அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பாரதிதாசன், செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story