படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் 3 நாட்கள் அன்னதானம்
வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் அன்னதானத்தை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 3 நாட்கள் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் பா.முருகேஷ் கலந்துகொண்டு அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் பயிற்சி கலக்டர் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.வி.சேகர், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் தாமரைச்செல்விஆனந்தன், போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போளூர் வட்டாட்சியர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் தஞ்சிம்மாள்லோகநாதன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக வள்ளலாரின் திருஅருட்பா பக்தி பாடல்களை பாடினர். கலெக்டர் முருகேஷ் வள்ளலார் சிலைக்கு மாலை அணிவித்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து கலெக்டர் ரேணுகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்தார்.
ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மு.ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம், மேலாளர் மகாதேவன், கணக்காளர் சீனிவாசன் உள்பட கோவில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.