3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்


3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x

ஜோலார்பேட்டை பகுதியில் 3 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 759 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு வேலூர் கூட்டுக் குடிநீர் பிரதான குழாயில் இருந்து இணைப்பு கொடுக்கப்பட உள்ளது. இதனால் வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மேட்டூரில் இருந்து வரும் பிரதான குழாயில் இருந்து வரும் தண்ணீர் தற்காலிகமாக 3 நாட்கள் வரை நிறுத்தப்படுகிறது.

அதனால் ஜோலார்பேட்டை நகருக்கு குடிநீர் வினியோகம் தற்காலிகமாக தடைப்படும். 2 அல்லது 3 நாட்களுக்குள் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதை ஈடுகட்ட ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில், உள்ளூர் நீராதாரங்களை பயன்படுத்தி பொது மக்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி தெரிவித்துள்ளார்.


Next Story