திருவையாறு பகுதிகளில் 3 நாட்கள் மின்நிறுத்தம்


திருவையாறு பகுதிகளில் 3 நாட்கள் மின்நிறுத்தம்
x

திருவையாறு பகுதிகளில் 3 நாட்கள் மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

திருவையாறு:

திருவையாறு துணை மின் நிலையத்திலிருந்து விளாங்குடி மின்னோட்டம் செல்லும் மின்பாதையில் நெடுஞ்சாலைத்துறையின் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது. மேலும் சாலையின் அருகில் விளாங்குடி மின் பாதையில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை(செவ்வாய்க்கிழமை) மற்றும் 15, 17-ந்தேதிகளில் பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, திங்களூர், பெரமூர், ஓலத்தேவராயண்பேட்டை, சீனிவாசா நகர், ஒக்கக்குடி, மடம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருவையாறு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்தார்.


Next Story