3 இருளர் இன மக்களுக்கு ஈமச்சடங்கு நிதி


3 இருளர் இன மக்களுக்கு ஈமச்சடங்கு நிதி
x

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 3 இருளர் இன மக்களுக்கு ஈமச்சடங்கு நிதியை கலெக்டர் வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 3 இருளர் இன மக்களுக்கு ஈமச்சடங்கு நிதியை கலெக்டர் வழங்கினார்.

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனுக்கள் மனு அளித்தனர். மொத்தம் 277 மனுக்கள் பெறப்பட்டது.

ஈமச்சடங்கு நிதி

அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

கூட்டத்தில், 3 இருளர் பழங்குடியினருக்கு ஈமச்சடங்கு நிதி உதவியாக ரூ.67 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, துணை கலெக்டர் தாரகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story