லாரி மீது பஸ் மோதி 3 மாணவிகள் காயம்


லாரி மீது பஸ் மோதி 3 மாணவிகள் காயம்
x

திருவிடைமருதூர் அருகே லாரி மீது பஸ் மோதி 3 மாணவிகள் காயம் அடைந்தனர்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தனியார் பஸ்சில் கல்லூரி மாணவிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அந்த பஸ் ஆடுதுறை அருகே தியாகராஜபுரம் அரசு தானியக் கிடங்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இதில், அந்த பஸ்சின் முன்புறம் அமர்ந்திருந்த 3 கல்லூரி மாணவிகள் காயமடைந்தனர். அவா்களை சக பயணிகள் மீட்டு ஆடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், ஆடுதுறை தியாகராஜபுரத்தில் உள்ள அரசு தானியக் கிடங்கிற்கு தானியங்கள் ஏற்ற நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்படுவதாலும், இந்த பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து கொண்டிருப்பதாலும் இதுபோன்று அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்கவும், லாரிகளை வேறு இடத்தில் நிறுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.






Related Tags :
Next Story