மர்மமான முறையில் 3 ஆடுகள் உயிரிழப்பு
மர்மமான முறையில் 3 ஆடுகள் உயிரிழப்பு
திருப்பூர்
பல்லடம்
பல்லடம் அருகே, மர்மமான முறையில் 3 ஆடுகள் உயிரிழப்பு.போலீசார் விசாரணை.
பல்லடம் நகராட்சி 3வது வார்டு குறிஞ்சிநகரைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் கிட்டுசாமி, 65, இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இந்தநிலையில், மாலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால், அந்தப் பகுதியில் உள்ள மின்மாற்றிக்கு கீழே ஆடுகள் ஒதுங்கி நின்றன. அப்போது இடி இடித்தது, சிறிது நேரம் கழித்து ஆடுகளை காணவில்லை என தேடிய போது, மின்மாற்றிக்கு கீழே அவர் வளர்த்த 3 ஆடுகள் இறந்து கிடந்தன. இடி தாக்கி ஆடுகள் இறந்தனவா, அல்லது மின்மாற்றில் இருந்து மின்சாரம் தாக்கி இறந்தனவா என்பது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story